புதிய வரவு செலவு திட்டம்: வாகன விலைகளும் அதிகரிப்பு

2019ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவு திட்டத்தின் கீழ் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிசொகுசு வாகனங்களுக்கான உற்பத்தி வரி திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், சிறிய கார்களுக்கான வரி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரியை 5 இலட்சம் ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 800 சிசி-க்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினாலும், 1000 சிசி-க்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

Related Posts