செம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு அகழ்வுகள் நடத்தப்படுகின்றது.

அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே அவ்வாயுத கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பைக்கோ மூலம் அகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

Related Posts