பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழு மோதல் மற்றும் இளைஞரின் கொலை தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related Posts