இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: பிரதமர் அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில், நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் பெற்றோல் ஒக்டேன் 95 எரிபொருள் ஒரு லீட்டர் தலா 10 ரூபாயினாலும், ஒடோ டீசல் ஒரு லீட்டர் 5 ரூபாயினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 10 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Posts