புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார்.
புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக, இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.