ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற்படுவதற்கு நம்பிக்கைக்கு உரியவர் என்று நாடாளுமன்றத்தால் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வைப் புறக்கணித்தனர்.