நாடாளுமன்றத்தை வரும் வெள்ளிக்கிழமை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய, கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர் இன்று நண்பகல் சந்தித்தார்.
இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.