Ad Widget

இராணுவத்தை பாதுகாக்க ஐ.நா.வில் கோரிக்கை!- ஜனாதிபதி

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூலம் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறையாக விசாரிக்காமல் இவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு சர்வதேச சட்டத்தில் இடமுண்டா என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ”என்னுடைய இந்த செயற்பாட்டிற்கு பலரும் எதிர்ப்பை வெளியிடக்கூடும். ஆனால், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை வாய்மூலம் முன்வைக்கும் அதேவேளை, 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இதனை எழுத்து மூலமாக பிரேரணையாக முன்வைக்கவுள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

Related Posts