காங்கேசன்துறை பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் குறித்த எழும்புக்கூடு இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக் கூடு ஆணினுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.