தமிழ் மக்களுக்கு பணியாற்ற தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு, லங்கா சமசமாஜ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முதலமைச்சர் விக்னேஸ்வரன் எமது லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், அவரை இணைத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எமது கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அலரி மாளிகையில் நியமனம் பெறும்போது அவரே என்னிடம் தெரிவித்திருந்தார்.
இதன்காரணமாக இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாதமற்ற முறையில் செயற்படும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு நான் அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.