Ad Widget

பெருந்தொகை நிதியில் கட்டப்பட்ட வன்னேரிக்குள சுற்றுலா மையம் பயன்பாடற்றுக் காணப்படுகிறது! வடமாகாணசபை மீது மக்கள் விசனம்!!

கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தில் வட.மாகாண சபையினால் சுமார் ஆறு மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் தற்போது பயனற்றுக் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

வட.மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் மாகாண நன்கொடை நிதியில் இருந்து சுமார் ஆறு 6 மில்லியன் ரூபா செலவில் இந்த சுற்றுலா மையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சுற்றுலா நிலையத்திற்கு இதுவரை மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், குறித்த சுற்றுலா மையத் தொகுதி எதுவித பராமரிப்புக்களுமின்றி பாழடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தொகை நிதியில் கட்டப்பட்ட இவ்வாறான கட்டடம் எவ்வித பயன்பாடற்று பாழடைந்த நிலையில் காணப்படுவது பல்வேறு தரப்புக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த சுற்றுலா மையம் தொடர்பில் வட.மாகாண சபை கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts