காரைநகர் கருங்காலி முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில், முன்னால் பவனி வந்த பிள்ளையார் தேர் குடை சாய்ந்தது.

மழை பெய்த ஈரலிப்பால் நிலத்தில் காணப்பட்ட சகதிநிலை காரணமாக பள்ளம் ஒன்றுக்குள் தேர்ச் சில்லும் புதையுண்டு தேர் குடை சாய்ந்ததாக ஆலயத்தினர் தெரிவித்தனர்.
இதில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் தேரின் இருப்பிடத்திற்கு வரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ எனும் அச்சம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.