கூட்டமைப்பு பேச்சு நடத்துமளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம் வாய்ந்த கட்சியோ அல்ல!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியதற்கான ஆதாரம் இருந்தால் அதனை ஈ.பி.டி.பி முதலில் அவற்றை வெளியிடட்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி ஒரு பெரிய கட்சி அல்ல”

இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாண அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது தமிழ்தேசிய கூட்ட மைப்பு, உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஈ.பி.டி.பி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தும் அளவுக்கு ஈ.பி.டி.பி என்பது பெரிய கட்சியோ, முக்கியத்துவம் வாய்ந்த கட்சியோ அல்ல. நாங்கள் பேச்சு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வாயால் கூறிக்கொண்டிருக்காமல் வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம்.

மற்றபடி ஈ.பி.டி.பி கட்சி பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை” என்று சுமந்திரன் கூறினார்.

Related Posts