மயக்க நிலையில் 18 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இருந்தே மேற்படி இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே சுவாச கோளாறு காரணமாக மயக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாகவே பெருமளவு நீர் இழக்கபட்டு மயக்கநிலை அடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதுடன் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.