அமைச்சரவை மாற்றத்தின் பின்னரான செயற்பாடுகள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கை!

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அரசியல் அமைப்பு பேரவையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தனியார் செய்தி பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே இதனை குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பான அறிவுறுத்தலை இலங்கை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுத்துள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் சுமந்திரன் கருத்து தெரிவித்தார்.

Related Posts