ஆனந்தசுதாகரனை விடுவிக்க மூன்று லட்சம் மக்கள் கையொப்பமிட்ட மனு கையளிப்பு

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனிடம், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட மூன்று லட்சம் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவையே ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தனர்.

மனுக் கையளிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் ந.அனந்தராஜ், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சாந்தசீலன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரும், வடக்கு மாகாணத்தின் பன்னிரெண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்களும், வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளும், வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச்சங்க உறுப்பினர்களும், பிராந்திய தலைவர், செயலாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Related Posts