தமிழர்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன: இரா.சம்பந்தன்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளேனும் தமிழ் மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையின் பிரச்சினைகளுக்கு ஒருமித்த பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வினை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களால், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள்” எனத் தெரிவித்தார்.

Related Posts