இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த தமிழ் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். சுழிபுரம் வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையினை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், வட. மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டனர்.