பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மற்றய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது

இச் சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த இருவரே உயிரிழந்தவர்கள் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கிட்னன் பரராஜசிங்கம், நவரட்ணம் ஜெயந்தன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.

உயிரிழந்த பராஜசிங்கத்தின் மனைவி குடும்பத்தில் இடம்பெற்ற பிரச்சிணை காரணமாக ஒருவகை நச்சு விதையினை உட்கொண்டுள்ளார். மனைவியினை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அச்சுவேலி வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியில் அனுப்பி வைத்துள்ளார்.

அம்பியூலன்ஸ் வண்டியினை பின் தொடர்ந்து சென்ற போது யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த மண் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த மோதுண்டுள்ளது.

சம்பவ இடத்தில் மனைவியினை பார்க்க சென்ற கணவனான பராஜசிங்கம் என்பவர் டிப்பர் சில்லினுள் தலை நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.

சடலங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts