பிள்ளைகளை தொலைத்து நிற்கும் எமக்கு என்ன கொண்டாட்டம்?- வவுனியா உறவுகள்

பிள்ளைகளை தொலைத்துவிட்டு வீதியில் காத்துக் கிடக்கும் நாம் எவ்வாறு மகளிர் தினத்தினை கொண்டாடுவது என வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும் வவுனியா உறவுகள் இன்று (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாகவே இன்றைய கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, தமது பிரச்சினையை சர்வதேசம் தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தினர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம் ஒரு வருடத்தை கடந்து இன்று 378ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts