கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை பார்வையிட்டார் இளவரசர் மிரெட் ராட்

கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் குறித்த நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts