யாழ்பாணத்திற்கு இரண்டாவது முறையாக நேற்று (திங்கட்கிழமை) நிலக்கரி ரயில், வந்துள்ளது.

காலை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து. யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த குறித்த ரயிலில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையில் அங்கு குறித்த ரயில் செல்லாதெனவும் இன்று காலை 10 மணிக்கு யாழ். ரயில் நிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு-கல்கிசை நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கு நான்கு சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ரயில் நிலையத்தை 4 மணியளவில் வருகை தரும் என கூறப்பட்டிருந்த போதிலும், ஆனையிறவில் வந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் அது சீர் செய்யப்பட்டு யாழ். ரயில் நிலையத்திற்கு 7 மணியளவில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.