Ad Widget

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் திடீர் மாற்றம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பிணித் தாயொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று(புதன்கிழமை) ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வருடம் தை மாதம் 24 ஆம் திகதி 7 மாத கர்ப்பிணித் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு எதிரான வழக்கு கடந்த ஒரு வருடமாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்த நிலையில் ஒரு வருடத்தின் பின்னர் அது தொடர்பான வழக்கு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Posts