50 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இசையமைத்து வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார்.
தமிழ் மொழி மூலமான பொலிஸ் கீதத்தை வவுனியாவைச் சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளருமான கந்தப்பு ஜயந்தன் பாடியுள்ளதுடன், பாடலுக்கான வரிகளை வீரசிங்கம் பிரதீபன் எழுதியுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமையானது இனங்களுக்கிடையிலான நல்லுணர்வினை மேலும் வலுப்படுத்தும் என இந்நிகழ்வின்போது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.