சம்பந்தனின் வீடு முற்றுகை: தமிழரசுக் கட்சியினருக்கும் நெருக்கடி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் நேற்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது.

தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக முற்றுகையில் ஈடுபட்ட பட்டதாரிகள் கூறியிருந்தனர்.

சம்பந்தனின் வீடு முற்றுகையிட்டதைப் போன்று தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்டு தமக்கு நியமனங்கள் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

Related Posts