திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி சேதம்

யாழ்ப்பாணம், கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி, இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

யாழ்., கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு மிக அருகில் யாழ். தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன.

அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்துக் கோவில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts