வடக்கு கிழக்கில் ஆழ்கடலில் மீன்பிடிக்க இன்னும் அனுமதி இல்லை

வடக்கு- கிழக்கில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என்று வடக்கு கிழக்கில் உள்ள இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கில் கடந்த 4 தினங்களுக்கு மேலாக மீனவர்கள் தமது தொழிலுக்காக கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் நேற்றயதினம் வடக்கு கிழக்கில் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர் ஈடுப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அறிவிப்பு வந்த பின்னரே அது தொடர்பாக மீனவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று வடக்கு கிழக்கில் உள்ள இடர் முகாமைத்துவ அதிகாரிகள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.

மீன்பிடி நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts