வடமாகாண திணைக்களங்களின் புதிய தலைமை அதிகாரிகளுக்கான புதிய நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே வழங்கி வைத்தார்.

யாழ் மாநகரசபை ஆணையாளராக பதவி வகித்த பொ.வாகீசன் வடமாகாண கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை முன்னாள் பிரதேச செயலாளராக இருந்த ஆர்.ரி.ஜெயசீலன் யாழ் மாநகரசபை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிவராஜலிங்கம் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக தற்காலிக பணிப்பாளராக எஸ்.பி.சிவநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாணசபை பிரதம செயலர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன். உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வாநாயகம் ஆகியோர் பங்கு பற்றினர்.