யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு மத்தியில், மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெ பன்சி எனனும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் நுளம்பு காய்ச்சல்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தவே இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (26) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
அதேசமயம், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 மரணங்களும் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.