தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் சூழ்ச்சியில் கூட்டமைப்பு : சுரேஸ்

தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கும் அரசின் சூழ்ச்சிக்கு, கூட்டமைப்பினர் சிலர் துணைபோவதாக, ஈ.பி.ஆர்.எல.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரமேச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பு என்கின்ற பேரில், தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்பட்டு, இவ்வாறான விடயங்களைக் கையாள்வதாகவும் அவர் கூறினார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

”அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் என்ற விடயங்கள் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. மஹிந்த எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை செய்தாரோ, அதையே நல்லாட்சி அரசும் செய்கிறது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் சிலர், தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்திற்கு உடந்தையாக செயற்படுகிறார்களா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கூட்டமைப்பு என்கின்ற பேரில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாள்கின்றது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து செல்கின்றது.” என்றும் கூறினார்.

Related Posts