உதயன் பத்திரிகை மீது வடக்கு விவசாய அமைச்சர் மானநஷ்ட வழக்கு!

டக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.
இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts