Ad Widget

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு!

ரயில்வே ஊழி­யர்கள் நாளை நள்­ளி­ரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக “ரயில்வே கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் தொழிற்­சங்க முன்­னணி” தெரி­வித்­துள்­ளது.

சம்­பளப் பிரச்­சினை உட்­பட பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து குறித்த பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக ரயில்வே கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் லால் ஆரி­ய­ரத்ன தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ரயில் சேவை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக சம்­பளப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­கின்­றனர். எனினும் அது தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­த­போ­திலும் அதற்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே எமது கோரிக்­கை­களில் அவ­தானம் செலுத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுக்கும் வகை­யி­லேயே குறித்த பணி பகிஷ்­க­ரிப்பை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

எனவே நாளை நள்­ளி­ரவு முதல் ரயில்வே சார­திகள், பாது­கா­வ­லர்கள்,நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிகள் மற்றும் கட்­டுப்­பாட்­டா­ளர்கள் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ளனர். எமது தொழிற்­சங்கப் போராட்­டத்தை 48 மணி­நே­ரத்­திற்கு மட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

ஆகவே எமது கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும். அல்லாதுபோனால் பரந்துபட்ட தொழிற்சங்கப் போட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts