வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் இன்னமும் தேவைப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கம். போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால், மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவா் இவ்வாறு தெரித்தார்.