காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் சுன்னாகம் பகுதியில் வைத்து தண்டவாளத்தில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று ( வியாழக்கிழமை) மாலை சுண்ணாகம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.