Ad Widget

சமுர்த்தி திட்டத்தை மேலும் பலப்படுத்துவோம்: ஜனாதிபதி

சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களின் நன்மைக்காக சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறப்பான செயற்திட்டங்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் மட்டுமே சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சமுர்த்தி திட்டம் வெற்றிபெறாத வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் திட்டத்தை வெற்றிபெற செய்வதற்காக துறையிலுள்ள அனைவரினதும் அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தும்போது சமுர்த்தி திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறிய கருத்திட்டங்களை பிரதேச கருத்திட்டங்களாக மாற்றி, தேசிய மட்டத்துக்கு கொண்டுவந்து, வெளிநாட்டு சந்தை வரை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Related Posts