வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்: வரதராஜப் பெருமாள்

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று வடக்கு மாகாணசபையில் அடிபட்டுக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில் மக்களை ஒற்றுமையாக வாக்களிக்கச் சொன்னவர்கள்தான்.

வடக்கு மாகாண சபையை என்ன நோக்கத்திற்காக மக்கள் உருவாக்கினார்களோ அந்த நோக்கத்தினை விடுத்து வடக்கு மாகாணசபை வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

வடக்கு மாகாணசபையில் இருக்கும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் சுமத்தப்படுகின்றன. இதனால் இந்தச் சபை ஊழல் மிகுந்த சபையாக மக்கள் பார்க்கின்றார்கள்.

இதனால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனிமேல் மக்கள் வாக்களிக்கும்போது இவர்களைப் பற்றிச் சிந்தித்தே வாக்களிப்பார்கள்” என அ.வரதராஜப் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts