யாழ்ப்பாணம் பகுதியில் சிவில் பாதுகாப்புச் சட்டங்களை அமுல்படுத்த அதிரடிப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் யாழ்.பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து குறித்த பிரதேசங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சிவில் பாதுகாப்புத் தொடா்பாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு அவசரத் தேவையின் போதும் பொலிஸாருக்கு உதவி வழங்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை தயாராக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.