ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது.

82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது.