இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இதற்கான முடிவை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ளன.
கனிய எண்ணெய் குதங்கள் இந்தியா உட்பட்ட நாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதை கண்டித்தே பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.இதன்காரணமாக போக்குவரத்தில் பாரிய பாதக நிலை ஏற்பட்டது.
இதன்பின்னர் இராணுவம் வரவழைக்கப்பட்டு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது கொலன்னாவையில் வைத்து 10 பணியாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தமது போராட்டத்தைவிலக்கிக்கொள்வதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.