உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு வடக்கு முதலமைச்சர் அஞ்சலி

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் இல்லத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நீதிபதியின் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts