சம்பந்தன், முதலமைச்சர் சி.வி. விரைவில் சந்திப்பு!

எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இம்மாத இறுதிக்குள் கொழும்பில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று அண்மையில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. எனினும் இறுதி தருணத்தில் அது சபையில் சமர்பிக்கப்படவில்லை.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts