மாகாண சபை விவகாரத்தில் சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்படுத்தப்பட்டது: எஸ். தவராசா

வடக்கு மாகாண சபை விவகாரத்தில் எதிா்க் கட்சித் தலைவா் இரா. சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்பட்டிருந்ததாகவும் அவருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவா் யாரும் தற்போது நம்மத்தியில் இல்லை எனவும் வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சித் தலைவா் எஸ். தவராசா தெரிவித்துள்ளாா்.

அண்மைக் காலமாக வடக்கு மாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள் தொடா்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவை தொடா்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எதிா்க் கட்சித் தலைா் இதனைத் தெரிவித்துள்ளாா்.

குறித்த கலந்துரையாடலில் அவா் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

”வடக்கு மாகாண சபை விவகாரத்தில் எதிா்க் கட்சித் தலைவா் இரா. சம்மந்தனின் நகா்வுகளிலும் தீா்மானங்களிலும் அவருடைய அரசியல் முதிா்ச்சியை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதேபோன்றுதான், அண்மைக் காலமாக அவருடைய அரசியல் நகா்வுகளும் மிகவும் நிதானமாக அமைந்திருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அரசியல் சூழ்நிலைகளை அனுசரித்து அரசியல் தீா்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருப்பதை ஊகிக்க கூடியாதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் சிலவற்றுடன் வேறுபாடான கருத்துக்கள் எனக்கு இருக்கின்றபோதும், தற்போதைக்கு கூட்டமைப்பை பிளவுபடுத்துகின்ற அல்லது பலவீனப்படுத்துகின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானது இல்லை” எனவும் தெரிவித்துள்ளாா்.

Related Posts