புனர்வாழ்வு பெற்ற பின்னரே சம்பந்தன் வெற்றிவாய்ப்பை பெற்றார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விடுதலைப் புலிகளிடம் புனர்வாழ்வு பெற்ற பின்னரே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெற்றிவாய்ப்பை பெற்றதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், தமிழ்தேசிய மக்கள் முன்னணி தோற்றுப்போன தரப்பு என்றும் குழப்பம் செய்வதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தொடர்ந்து தோல்விகளை சந்தித்த இரா. சம்பந்தன் விடுதலைப்புலிகளின் தயவால் தேர்தலில் வெற்றிபெற்றார். இவர் தேர்தலில் தோற்றவர்கள் என்று எம்மை சுட்டிக்காட்டுவது வேடிக்கையாக உள்ளது. இப்போதும் இதுபோன்ற கருத்துக்களை சம்பந்தன் கூறுகின்றாரா என்பது எனக்கு தெரியவில்லை.

முடிந்தால் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றியடைந்து காட்டட்டும் பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Related Posts