வட.மாகாண சபை விவகாரம் குறித்து கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்

வட. மாகாண சபையின் எதிர்கால நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவசரமாக இந்த கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் வட.மாகாண சபை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளை வியாழக்கிழமையும் இந்த கூட்டம் தொடரும் என்றும் கூறப்படுகின்றது.

Related Posts