உத்தேச அரசியல் யாப்பு இனப் பிரச்சனைக்குரிய தீர்வாகத்தான் அமையும் : எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குரிய தீர்வாகத்தான் வரயிருக்கின்ற உத்தேச அரசியல் யாப்பு வரும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

அரசின் கொள்கைத் திட்டத்தில் புதிய அரசியல் சாசனத்திற்கு நாம் ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் தான் இன்று ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறினால் அதில் பல விடையங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

மக்களின் நிலங்களின் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

கைதிகள் 3.2 வீதமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களின் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கு முக்கிய பிரச்சனை தழிழ் அரசியல் ரீதியாக பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். என்று அதற்காக நாட்டின் சட்டவாக்கம்,சமூக ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

அவற்றிக்காக நாம் ஆதரவு செலுத்தினோம்.பின்னர் நாங்கள் இரு பிரதான கட்சிகளை ஒன்று சேர வைத்தான் பின்னரும் அவற்றில் தேசிய அரசாங்கத்தினையும் அமைத்து விட்டு அதனை முடி அடிப்பதற்கு செயற்படுத்து மிக முட்டாள் தனம் எதனை நாம் அடைய நினைக்கின்றோம் அதற்காக வழியினை தான் அமைத்து இருக்கின்றோம்.அதற்காக நாம் அரசிற்கு ஆதரவு செலுத்த வேண்டும்.என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts