வவுனியா தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை அரச போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று(08) நண்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் இந்த மோதலுக்குக் காரணம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இதேபோன்று மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.