காங்கேசன்துறை கடற்பரப்பிலிலுந்து 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

காங்கேசன்துறை கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் 9 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில், குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 9 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த ஹெரோயின் பொதியை வடக்கு கடற்பரப்பினூடாக கொழும்பிற்கு கொண்டு செல்ல போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முயற்சித்திருக்கலாம் என்றும், ஆனால் கடற்படையினரை கண்டதும் அதனை கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts