ரயிலுடன் மோதியது இராணுவ வாகனம்

சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் நேற்று ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமிலிருந்து சப்பச்சி மாவடி வீதியூடாக வந்த குறித்த இராணுவ வாகனம் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த இராணுவத்தினர் நால்வரும் வாகனத்தை விட்டு பாய்ந்து தப்பியுள்ளனர். இதில் பாயும்போது காயமடைந்த சிப்பாய் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts