இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து சேர்ந்தார். அவரை இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்காக பன்னாட்டு வானூர்தித் தளத்தில் நேரில் சென்று வரவேற்றர்.
இலங்கையை வந்தடைந்த மோடி தனது கீச்சகப் பதிவில், கொழும்பை வந்தடைந்து விட்டேன். இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, இங்கே பன்னாட்டு வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன், என்று பதிவிட்டுள்ளார்.
