புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனுடைய கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ அவர்கள்
இவ்விடயத்தில் கூட்டமைப்பினர் இரட்டை வேடம் போடுகின்றனர். தமிழ் மக்களை மிருகங்களை போல மிகக் கொடூரமாக அடக்கக்கூடிய சட்டவரைபு என்பதனை நன்கு தெரிந்து கொண்டு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கிவிட்டு தமிழ் மக்கள் முன்னால் தப்பித்துக் கொள்வதற்காக அச்சட்ட வரைபின் உள்ளடக்கம் தொடர்பில்தாம் அதிர்ச்சியடைவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர் எனக் குறிப்பிட்டள்ளார்.